நீர்த்தொட்டிக்குள் தவறி வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் பகுதியில் நீர்த்தொட்டிக்குள் வீழ்ந்து ஒன்றரை வயதான பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த அனர்த்தம் நேற்று முன்தினம்(29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அயல் வீட்டு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த நீர்த்தொட்டிக்குள் தவறி வீழ்ந்துள்ளது
இதனையடுத்து குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் குழந்தையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment