Header Ads



இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு


இஸ்ரேலில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக , இஸ்ரேலிலுள்ள இலங்கைப் பணியாளர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்த இலங்கை வெளிநாட்டு  வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது.


அதன்படி +94716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாகத் தகவல்களைப் பெற முடியும். அல்லது 1989 என்ற அவசர அழைப்பு இலக்கத்தின் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தைத் தொடர்பு கொள்ள முடியும்.


தற்போது இஸ்ரேலில் கிட்டத்தட்ட 8,000 இலங்கையர்கள் பணிபுரிவதுடன் அவர்களில் 90 வீதமானோர் தாதி சேவையில் ஈடுபட்டுள்ளனர்.


இதேவேளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு அந்நாட்டிலுள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து வினவினார்.


இஸ்ரேலிலுள்ள இலங்கைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமைச்சர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்னதாகவே அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.