Header Ads



ஹமாஸ் - இஸ்ரேல் யுத்தம், இலங்கைக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்


இன்றைய (15) ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரம ரத்ன அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்.


*இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினை தொடர்ந்து. வருகிறது. 


*பயங்கரவாதம் தலைதூக்கும் அதை அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்.


*இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானமாக தீர்வு காண வேண்டும்.எமது நாடும் யுத்த அவலத்தை சந்தித்து நேரில் அநுபவம் கொண்ட நாடு.இதில் சாதாரண மக்களின் உயிர்கள் முக்கியமானது.


*தற்போதைய பிரச்சினையினால் மத்திய கிழக்கில் பல ஆயிராக்கணக்காண இலங்கை மக்கள் தொழில் புரிகின்றனர்.


அவர்களையும், அவர்களது பொருளாதார வருமானத்தையும் பாதுக்க வேண்டும்.இன்சூரன்ஸ் இன்றியமையாதது.


*எமது ஏற்றுமதி செலவுகள் அதிகரிக்கும்.செலவு அதிகரிப்பால் ஏற்றுமதி குறைவடையும்.தேயிலை ஏற்றுமதியே பெருமளவில் குறைவடையும்.


*இலங்கை-ஈரான் Tea for Oil உடன்பாடு பிரச்சினைக்குரிய விடயமாக மாறும்.


எண்ணெய்க்கு தேயிலை' பண்டமாற்று ஏற்பாட்டிற்காக இலங்கைக்கும் ஈரானுக்கும்  இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இதனால் வெகுவாக பாதிக்கும்.


*பலஸ்தீனுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை தேயிலை சார்ந்த பிரச்சினையும் உருவாகும்.


*எரிபொருள் இறக்குமதி பாதிக்கும்.டீசல் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்படலாம்.


*உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குரிய நிதியை வழங்குமாறு  தேரதல்கள் ஆணக்குழு அரசாங்கத்திடம் கோரியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம். இவ்வாறேனும் தேர்தலை நடத்த நடத்த வேண்டும்.


தேர்தலை நடுத்துவது நடத்தாதிருப்பது போன்ற விடயங்களில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது.அது நிர்வாக விடயம்.மக்கள் இறையாண்மை சார்ந்தது. இதில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது.


*பொதுத் தேர்தலையும் பிற்போட மந்திர சூத்திரங்களை அரசாங்கம் தேடி வருகின்றது.ஜனாதிபதி தேர்தலை பிற்போட நாம் ஒருபோதும் இடமளியோம்.

உரிய நேரத்திற்கு தேர்தல் இடம் பெற வேண்டும்.எந்தத் தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயார்.முடியுமானால் தற்போது பொதுத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறோம்.

No comments

Powered by Blogger.