Header Ads



ஏறாவூர் ஜிப்ரி தைக்கா பள்ளிவாசலில், மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


15 வயதிற்கு மேற்பட்ட (ஆண்/பெண்) பெரியவர்களுக்கான, அல் குர் ஆனை சரியாக ஓதுவதற்காக வழங்கப்பட்ட பயிற்சி வகுப்பினை வெற்றிகரமாக முடித்த  மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு நேற்றைய தினம் ( 28/10) ஏறாவூர் ஜிப்ரி தைக்கா பள்ளிவாசலில் நடைபெற்றது.


ஏறாவூர் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் பேஷ் இமாமான அல் ஹாபிழ், காரி மௌலவி எம் ஜே எம். இப்ராஸ் (பாகவி)   ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு உள்ளூர் வெளியூர் உலமாக்கள், கல்வியியலாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று பலரும் கலந்து சிறப்பித்தனர்.


அல் குர்ஆனை முறையாக கற்று மற்றவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டுமென்ற கல்வி முறையை பல நாடுகளிலும் கற்றுத் தேர்ந்த அல் ஹாபிழ் எம்ஜேஎம். இப்ராஸ் (பாகவி)  , வயது முதிர்ச்சி அடைந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு அல் குர்ஆனை பிழைகளின்றி முறையாக ஓதுவதற்கான பயிற்சி வகுப்புகள் ஏறாவூர் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


வயோதிபர்கள் ,அரச உத்தியோகத்தர்கள் ,அன்றாட கூலி வேலை செய்வோர்கள் எல்லோரும் கூச்ச சுபாவமின்றி, உள்ளச்சத்தோடு  அல் குர்ஆனை கற்று ஓதுவதை பார்க்கும் போது உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது.


அல் குர்ஆனை சிறந்த முறையில் ஓதுவதற்கு கற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்குமான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பல உலமாக்களின் சிறப்பான பயனுள்ள பயானும் நடைபெற்று நிகழ்வுகள் யாவும் ளுகர் தொழுகைக்கு முன்பாக நிறைவு பெற்றது.





No comments

Powered by Blogger.