இஸ்ரேலின் அராஜகத்திற்கு எதிராக ஏறாவூரில் கண்டனப் பேரணி, பெண்களும் பங்கேற்பு
(உமர் அறபாத்)
ஏறாவூர் சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இஸ்ரேலுக்கு எதிராக எதிர்ப்பினை வெளியிட்டும் பலஸ்தீன மக்களுக்காக ஆதரவு தெரிவிக்கும் வகையிலான அமைதிப் கண்டணப் பேரணி ஜாமிஉல் அக்பர் பள்ளிவாயலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர சந்தி வரை சென்று இஸ்ரேலுக்கு எதிராக எதிர்ப்பினையும் பலஸ்தீன உறவுகளுக்கு தமது ஆதரவினையும் தெரிவித்தனர்.
இக்கண்டன அமைதிப் பேரணியில் பெரும்மளவான பொதுமக்கள் மற்றும் பெண்கள் ,உலமாக்கள்,
கல்விமான்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள்,
சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் விஷேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.
மேலும் அமைதி கண்டன பேரணியில் கலந்து கொண்டோர் "கொல்லாதே கொல்லாதே ,
பிஞ்சுகளை கொல்லாதே"."
இஸ்ரேலே உனது மனிதாபிமானம் எங்கே?,
பலஸ்தீன் முஸ்லீம்களின் பூர்வீக பூமி,பலஸ்தீன் மண் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பதாதைகளையும் ஏந்தி நின்றனர்.
இவ் அமைதிப் பேரணியில் சின்னஞ் சிறார்கள்,பெண்கள் உட்பட பலர் பலஸ்தீன் கொடியினை ஏந்தி தமது ஆதரவினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது .
Post a Comment