Header Ads



இலங்கைக்கு ஏற்படப்போகும் நெருக்கடி


தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய பாய்ச்சலில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதே இதற்கு ஒரே பதில்.


அத்துடன் மீண்டும் எரிபொருள் கோட்டா முறைக்கு செல்ல வேண்டும்.


உலகில் நிலவும் யுத்த சூழல், எதிர்வரும் குளிர்கால காலநிலை, எரிபொருள் போக்குவரத்திற்காக அறவிடப்படும் காப்புறுதி கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விநியோகம் குறைவடைந்தமை போன்ற காரணங்களால் எரிபொருள் விலை உயரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.