"அதை மறந்துவிடாதீர்கள்”
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்தோடு இருவரும் கணிசமான நேரம் நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த திடீர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அது இடம்பெற்ற விதம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
“பொஹொட்டுவ வகித்து வந்த அமைச்சுப் பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டமையே முன்னாள் ஜனாதிபதியின் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தமையும் தெரிந்ததே.
பொஹொட்டுவா இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கும் உங்கள் நிலைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கும் உங்களுக்கு ஆதரவளிக்கிறது, அதை மறந்துவிடாதீர்கள்” என்றும் மஹிந்த ராஜபக்ஷ இங்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. JV
ஆம் இதையும் மறந்துவிட வேண்டாம். அளவுக்கு அதிகமான அழுத்தங்கள் ரணிலுக்குப் பிரயோகிக்கப்பட்டு ரணில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் (රනිල් ගොඩ පොහොටිටුව කොටඋඩ) ரணில் கொட, பொஹொட்டுவ கொடஉட என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
ReplyDelete