கிங் கங்கையின் 2 புறமும் உள்ள மக்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்
கிங் கங்கையின் நீர் மட்டம் 5.3 மீற்றராக உயர்ந்துள்ளது.
காலி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, பத்தேகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிங் கங்கையின் இருபுறமும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு மாவட்டச் செயலாளர் சாந்த வீரசிங்க அறிவித்துள்ளார்.
Post a Comment