Header Ads



பாராளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் நியமனம்


அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.


நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.


அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.