மலைப்பாம்பு மீட்பு
காசல்ரி நீர்த்தேகத்தில் நிவ்வெளிகம பகுதியில் 8 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையிலே இந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர் ஒருவர் மலைப்பாம்பு சிக்கியிருப்பதனை கண்டு வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து மலைப்பாம்பினை கரைக்கு கொண்டு வந்தபோது அது உயிரிழந்துள்ள நிலையில் பாம்பினை புதைக்குமாறு வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக மத்திய மலை நாட்டில் சரிவு பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த மலைப்பாம்பு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு நீர்த்தேகத்திற்கு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது
Post a Comment