இஸ்ரேல் படைகளைத் எதனாலும் தடுக்க முடியாது, இறுதியில் ஹமாஸ் இருக்காது - காஸாவில் இதுவே எமது கடைசி நடவடிக்கை
காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு கேலன்ட் இதைத் தெரிவித்தார்.
"செயல்பாட்டு அம்சங்களைப் பொறுத்தவரை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைத் தடுக்க எதனாலும் முடியாது," என்று அவர் கூறினார்.
"காஸாவில் இதுவே எங்களின் கடைசி நடவடிக்கையாக இருக்கும். இதற்குப் பிறகு ஹமாஸ் இருக்காது," என்றார் அவர்.
மேலும், கேலன்ட், அடுத்த கட்டமாக, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தரைப்படை நடவடிக்கை, ‘விரைவில் வரும்’ என்றார். ஆனால், எவ்வளவு விரைவில் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Post a Comment