காதலியின் நிர்வாண படத்தை, அவரது வீட்டின் முன் ஒட்டிய இளைஞன்
சந்தேகநபரிடம் இருந்து பெரிதாக்கப்பட்டு தயார் செய்யப்பட்ட நிலையில் குறித்த யுவதியின் மேலும் 4 நிர்வாண புகைப்படங்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய மடி கணனியையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
23 வயதுடைய குறித்த யுவதியும் சந்தேகநபருக்கும் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாகவும், பாடசாலை நண்பரான சந்தேகநபருடன் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், அச்சமயத்தில் புகைப்படங்களும் எடுக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்
சந்தேகநபரின் முரண்பாடு காரணமாக யுவதி சந்தேக நபரைத் தவிர்த்து வந்ததாகவும், ஆத்திரமடைந்த சந்தேகநபர், கடதாசி (A4) ஒன்றில் அவரது முகத்துடன் கூடிய நிர்வாணப் புகைப்படத்தை பெரிதாக்கி யுவதியின் வீட்டு வாயிலில் ஒட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதனைப் பார்த்த யுவதி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment