Header Ads



அதிகாரிகளின் கண்களுக்குத் தெரியாமல், ஜப்பான் செல்ல விமானத்தில் ஏறி ஆசனத்தில் அமர்ந்திருந்தவர்


- Ismathul Rahuman -


      எந்தவொரு ஆவணங்களும் இன்றி கடவுச்சீட்டை மாத்திரம் பயன்படுத்தி  ஜப்பான் செல்ல முற்பட்டவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


      ஜப்பான் நாட்டிற்குச் செல்வதற்காக 30 திகதி அதிகாலையில் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் வந்த பயணி ஒருவர் எந்தவொரு ஆவணங்களோ விமான பயணச்சீட்டோ இன்றி கடவுச்சீட்டை மாத்திரம் பபயன்படுத்தி சகல பரிசோதனை கருமபீடங்களையும் தாண்டி விமானத்தில் ஏறி ஆசனத்தில் அமர்ந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.


        ஹெந்தல, சான்தி வீதியைச் சேர்ந்த பீ. சுதாகர் இந்திரஜித் என்பவரே கைது செய்யப்பட்டார். இவர் திருமணம் முடிப்பதற்காக ஜப்பானிலிருந்து வந்து மீண்டும் அங்கு செல்ல முற்பட்ட வேளையிலேயை கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.


      சந்தேக நபரை நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபரை இம்மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட பதில் நீதவான், கடவுச்சீட்டை மட்டும் உபயோகித்து வேறு எந்த ஆவணங்களுமின்றி  அதிகாரிகளின் கண்களுக்குத் தெரியாமல் விமான நிலைய வெளியேறும் வாயிலினால் விமானம் வரை பயணி ஒருவர் செல்ல வாய்புக்கிடைப்பது தேசிய பாதுகாப்பிற்கு பெறும் அச்சுறுத்தல் என்பதனால் இது தொடர்பாக உரிய விசாரணை நடாத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்குமாறும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கட்டளையிட்டார்.

No comments

Powered by Blogger.