Header Ads



ருமேனியா ஆசைகாட்டி ஆட்களை ஏமாற்றிய தம்பதி கைது


ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து 30 இற்கு மேற்பட்டோரிடம் பண மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


மாதம்பை - இரட்டைக்குளம் பகுதியில் குத்தகைக்கு தங்கியிருந்த குறித்த தம்பதியினர், தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.


குருணாகல் பகுதியிலுள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக கடமையாற்றுவதாக தெரிவித்து அவர்கள் இரண்டரை கோடி ரூபாவுக்கும் அதிக பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.


சிலாபம், கற்பிட்டி, புத்தளம், ஆராச்சிகட்டுவ, மாரவில, நீர்கொழும்பு மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரிடம் இருந்து அவர்கள் பணத்தை பெற்றுள்ளமையும் அம்பலமாகியுள்ளது.  

No comments

Powered by Blogger.