டுபாயில் இருக்கும் 'கலனா'வின் வழிகாட்டுதலின் கீழ் செயற்படும் இமா பிடிபட்டாள்
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வத்தளையைச் சேர்ந்த "இமா" என்ற 27 வயதுடைய பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மற்றும் சந்துனுமலை பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கும் குறித்த நபருக்கும் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
ஜூலை 14ஆம் திகதி 2023 அன்று துனுமலைப் பகுதியிலும், ஒகஸ்ட் 12ஆம் திகதி 2023 அன்று நீர்கொழும்பிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு காரணமான நபர்களுக்கு துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கு 'இமா' உதவியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவர் திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு தற்போது துபாயில் இருக்கும் 'கலனா'வின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதாக கூறப்படுகிறது. கலனா என்பவர் கைதான 'கனேமுல்ல சஞ்சீவா'வின் சீடர் என அறியப்படுகிறார்.
இறாகமவில் STF இன் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 'இமா' கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, அவரிடமிருந்த 5 கிராம் ஐஸ் மற்றும் கையடக்கத் தொலைபேசியை STF படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து இமா , மேலதிக விசாரணைகளுக்காக இறாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment