Header Ads



இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஊடுருவியது எப்படி..? இஸ்ரேல் உளவு அமைப்புக்களுக்கு தோல்வியா..??


- பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் -


"இது எப்படி நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை."


இவ்வளவு பெரிய பலம் இருந்தும், இஸ்ரேலிய உளவுத்துறை இந்தத் தாக்குதல் வருவதை எப்படி கவனிக்கத் தவறியது என பிபிசி செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் கேட்ட கேள்விக்கு, இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த பதில் இதுதான்.


ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் உள்ள பலமான எல்லையைக் கடக்க முடிந்ததுள்ளது. அதேபாேல, ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.


இஸ்ரேலிய உள்நாட்டு உளவுத்துறையான ஷின் பெட்(Shin Bet), அந்நாட்டின் வெளிநாட்டு உளவு அமைப்பான மொசாட் (Mossad) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அனைத்து அமைப்புகளுக்கும் இப்படியொரு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்பது தெரியவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது.


அல்லது, ஒரு வேளை அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர்.


மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் இஸ்ரேல்தான் மிகவும் விரிவான மற்றும் அதிக நிதியளிக்கப்பட்ட உளவு அமைப்பைக் கொண்டுள்ளது.


ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.


இஸ்ரேல் உளவுத்துறை தவறியது எங்கே?

இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கு உள்ளும், லெபனான், சிரியா மற்றும் பிற இடங்களிலும் தனக்குத் தகவல் தரும் உளவாளிகளைக் கொண்டுள்ளது.


கடந்த காலங்களில், ஆயுதமேந்திய குழுக்களுடைய தலைவர்களின் அனைத்து செயல்பாட்டுகளையும் முழுமையாக அறிந்து, அவர்களைக் குறித்த நேரத்தில் படுகொலை செய்ததுள்ளது இஸ்ரேல்.


சில நேரங்களில், தன்னுடைய உளவாளிகள் மூலம் கார்களில் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தி, ட்ரோன் தாக்குதல்கள் மூலம் தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.


கடந்த காலங்களில், இஸ்ரேல் உளவு அமைப்பின் உதவியோடு, அந்நாட்டின் பாதுகாப்புப் படை 'வெடிக்கும்' மொபைல் போன்களை கூட பயன்படுத்தித் தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.


தரையில், காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பதற்றமான எல்லையில் கேமராக்கள், தரை-மோஷன் சென்சார்கள் மற்றும் வழக்கமான ராணுவ ரோந்துகள் உள்ளன.


இந்தத் தாக்குதலில் நடந்த ஊடுருவலைத் தடுக்க, முள்கம்பி வேலி ஒரு தடையாக இருந்திருக்கக்கூடும்.


ஆனால், ஹமாஸின் ஆயுதமேந்திய குழுவினர் வெறுமனே புல்டோசர் மூலமும், கம்பியில் துளைகளை வெட்டியும் தரை வழியாக நுழைந்துள்ளனர். அதேபோல, சிலர் கடலில் இருந்தும், பாராகிளைடர் மூலம் வான் வழியிலும் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.


இஸ்ரேலின் இத்தனை காண்காணிப்புக்கு இடையில், ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை குவித்து வைத்து சுடுவதற்கும், இஸ்ரேலின் மீது இத்தகைய தாக்குதலை நிகழ்த்துவதற்கும், ஹமாஸ் அசாதாரணமாகச் செயல்பட்டு, ஒருங்கிணைந்து இந்தச் சிக்கலான தாக்குதலுக்கு தங்களைத் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும்.


கடந்த 1973ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த யோம் கிப்பூர் போரின் 50வது ஆண்டு நினைவு நாளில், மற்றுமொரு திடீர் தாக்குதல் எப்படி நடந்தது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்பதில் ஆச்சரியமில்லை.


இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இஸ்ரேலிய அதிகாரிகள், இதுகுறித்து விரிவான விசாரணையைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், இந்த விசாரணை பல ஆண்டுகள் தொடரும் என்றும் கூறினர்.


இந்த விசாரணையைத் தாண்டி, இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் உள்ளன.


இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் பல சமூகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதமேந்திய குழுக்களை அகற்றி, அதன் தெற்கு எல்லைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இஸ்ரேலுக்கு தற்போது மிக முக்கியமான வேலையாக இருக்கும்.


ஆயுதமேந்திய மீட்புப் பணி மூலமாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ சிறைபிடிக்கப்பட்ட தனது சொந்த குடிமக்களின் பிரச்னையை இஸ்ரேல் தீர்க்க வேண்டும்.


ஆயுதமேந்திய மீட்புப் பணி மூலமாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ சிறைப்பிடிக்கப்பட்ட தனது சொந்த குடிமக்களின் பிரச்னையை இஸ்ரேல் தீர்க்க வேண்டும்.


இஸ்ரேல் மீது ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளுக்கான ஏவுதளங்களையும் கண்டுபிடித்து, அவற்றை அகற்ற முயலும். ஆனால், இது கிட்டத்தட்ட சாத்தியமற்ற பணி. ஏனென்றால், இதுவரை ஏவப்பட்ட ராக்கெட்டுகள் அனைத்தும், எந்த இடத்திலிருந்தும் தடம் தெரியாமல் ஏவக்கூடியவை.


ஒருவேளை இஸ்ரேலுக்கு மிகப் பெரிய கவலை இதுவாக இருக்கலாம்: "ஹமாஸின் ஆயுதப் போராட்ட அழைப்பிற்கு மற்றவர்கள் பதிலளித்து செயலாற்றுவதை எப்படி நிறுத்துவது, மேற்குக் கரைப் பகுதியில் பரவும் இந்த மோதலை எப்படித் தவிர்ப்பது, லெபனானுடனான அதன் வடக்கு எல்லையில் ஹெஸ்பொல்லாவின் அதிக ஆயுதம் ஏந்திய குழுவினரை எப்படி ஈர்ப்பது?"

No comments

Powered by Blogger.