Header Ads



தமிழர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக்க திட்டம்


இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழர் ஒருவரை அதிபர் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் இன்று -01- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதாக கூறி அதிபர் பதவிக்கு வருவோர் பின்பு தமது நிலைப்பாட்டில் இருந்து மாறி விடுகிறார்கள்.


தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க கூட 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக கூறிவந்த நிலையில் அந்த நிலைப்பாட்டை கைவிட்டுள்ளார்.


அதிபர் தேர்தல் நடைபெறப்போகும் வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகிறது.


ஆகவே அடுத்து வரும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்று பட்டு தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தவேண்டும்.


தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம்"என்றார்.


அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.