Header Ads



ஆதரவளித்தமைக்கு இலங்கைக்கு, நன்றி கூறிய சவூதி


இலங்கையின் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியை தொடர்பு கொண்டார் சவுதி அரேபிய வெளி விவகார அமைச்சர் இளவரசர் பைஸல்


இன்றைய தினம் -29- சவுதி அரேபிய வெளி விவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் அப்துள்ளாஹ் இலங்கையின் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி அவர்களுடன்  தொடர்பு கொண்டு பேசியதாக சவுதி அரேபிய வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ள


ஆரம்பமாக பலஸ்தீன் விடயத்தில் ஐ.நா. வில் சென்ற வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்தான். 


சென்ற வெள்ளிக்கிழமை ஐ.நா. சபையில் காஸாவில் இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவில் சர்வதேச ரீதியான சட்டங்கள் நியமங்கள், மனி நேயத்தைப் பின்பற்றி  நிவாரணம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உடனடியாக அணுமதிக்க வேண்டும் எனவும் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக இலங்கையும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


இருவரும் காஸாவின் நிலவரத்துடன் தொடர்புடைய பல விடயங்களை கலந்துரையாடினர்.

1 comment:

  1. ஒரு நாட்டு வௌிநாட்டு அமைச்சர் மற்றொரு நாட்டின் வௌிநாட்டு அமைச்சருடன் தொலை பேசியில் சலந்து ரையாடுவது சாதாரண விஷயம். அந்த அடிப்படையில் இலங்கையை முற்றாக ஓரம் கட்டிவைத்திருந்த சவூதி அரேபியா காஸா விடயத்தில் இலங்கை ஆதரவளித்தமையை நினைவூட்ட சவூதியின் வௌிநாட்டு அமைச்சர், இலங்கை வௌிநாட்டு அமைச்சருடன் பேசுவது சர்வதாதாரண விடயம். இலங்கை வௌிநாட்டு அமைச்சரின் புன்னகையைப் பார்க்கும் போது இனி சவூதியை நாம் கையில் போட்டுவிட்டோம் என்ற பெருமை போல் தெரிகிறது. ஆனால் முஸ்லிம்களின் மையத்துக்களை தீயிட்டுக் கொளுத்திய கோதாவின் நண்பரை எந்தவகையிலும் நெருங்குவதற்கு சவூதி அரேபியா தயாரில்லை என்பதை பலதடவைகள் இலங்கைக்கு நினைவூட்டியது. அந்த நிலைப்பாட்டிலிருந்து சவூதி அரேபியா இன்னும் ஒரு கடுகளவேனும் மாறவில்லை என்பதை இலங்கை ஞாபகத்தில் வைத்திருந்தால் போதும்.

    ReplyDelete

Powered by Blogger.