Header Ads



எனது மகன் ஆட்சிபீடம் ஏறலாம்


நாமலுக்கு மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால், அவர் நாட்டின் தலைமைக்கு வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ருமேனிய கிளையின் பல அங்கத்தவர்கள் அவரைச் சந்திக்க வந்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


இன்று உலகில் பெரும்பான்மையானவர்கள் இளம் தலைவர்கள் என்றும், அதனால் கட்சித் தலைவராகும் தகுதி நாமல் ராஜபக்சவுக்கும் உண்டு என்றும் மகிந்த ராஜபக்ச தெரவித்துள்ளார்.


மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால் நாமல் எனது மகன் ஆட்சிபீடம் ஏறலாம். ஒரு தந்தை தன் குழந்தைகளை எப்போதும் சிறியவர்களாகவே பார்க்கிறார்.


நாமலுக்கு மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால், அவர் நாட்டின் தலைமைக்கு வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’’ என்றார்.  

No comments

Powered by Blogger.