உத்தமம் குறித்து ஜனாதிபதிக்கு, அறிவுரை கூறும் நாமல்
இன்று -25- செய்தியாளர்களிடம் பேசிய நாமல், கூட்டணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், கட்சிக்கு இடையே அமைதியைப் பேணவும் ஜனாதிபதி அறிந்திருக்க வேண்டும் என்றார்.
“நல்லாட்சி அரசாங்கத்தின் போது இரு தலைவர்களும் இரு வேறு திசைகளில் சென்றதன் விளைவு தேசத்தின் ஸ்திரமின்மை மீது தாக்கம் ஏற்படுத்தியது” என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் முடிவெடுக்கும் போதும் கூட்டணி அரசியலில் ஈடுபடும் போது ஜனாதிபதி பிற தலைவர்களுடன் கலந்துரையாடுவது உத்தமம் என தாம் நம்புவதாக நாமல் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இது அமைச்சரவை மாற்றமாக கருதப்பட முடியாது எனவும், இது பதவி மாற்றம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.
“அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. எவ்வாறாயினும், இந்த விடயத்தை கூட்டணிகளுக்கு அறிவிக்கவும் கலந்துரையாடவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது” என நாமல் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் (SLPP) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (SLFP) இடையிலான மோதல் குறித்து கேள்வி எழுப்பிய போது எம்.பி. நாமல் ராஜபக்ச அத்தகைய வதந்திகளை மறுத்தார்.
Post a Comment