Header Ads



அஸ் - ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை


(பாறுக் ஷிஹான்)


உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை  கமு/கமு/ அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு   இன்று -02- பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில்   இடம் பெற்றது.


சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி  மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக அதிதிகளால் உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.


இதன்போது சுமார் 100க்கும் அதிகமாக மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்ட  நிகழ்வானது அதிபர் உட்பட  மாணவர்களின் தியாகம் அர்ப்பணிப்பு   ஒழுக்கம் சம்பந்தப்பட்டதுடன்   மாணவர்களின் சுற்றாடல் சார் நடவடிக்கைகள் இந்த அறுவடை செயற்பாட்டில் தங்கி இருப்பதாகவும் ஒழுக்கம் உள்ள இடத்தில் தான் காய் கனிகள் பாதுகாப்பாக இருக்கும்   எதிர்காலத்தில் இச்சிறுவர்களின்  திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக  அதிதிகளாக கலந்து கொண்டவர்கள்  குறிப்பிட்டனர்.


குறித்த நூற்றுக்கணக்கான  மாம்பழ அறுவடைக்கு முன்னர் மாம்பழ உற்பத்திக்கான  பங்களிப்பினை யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் மனோகரன் சசிகரன் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ஊடாக ஒரு தொகுதி பொதி செய்கின்ற  பைகளை வழங்கி ஊக்கப்படுத்தி ஆரோசனை வழங்கி  இருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments

Powered by Blogger.