இஸ்லாத்தை இழிவுபடுத்தி பேசிய ஜயசேகர கைது - பிணையில் விடுவிப்பதற்கு சிராஸ் நூர்டீன் கடும் எதிர்ப்பு
சந்தேக நபர் இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 291A மற்றும் பிரிவு 291B யின் அடிப்படையிலான தவறுகளை புந்துள்ளதாக கணனி குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்தனர்.
சந்தேக நபர் சார்பில் ஆஜராகிய சட்டதரணி குறிப்பிட்ட சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்கான வைத்திய அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
முஸ்லிம் முறைப்பாட்டாளர்கள் சார்பாக ஆஜராகிய சிரேஷ்ட சட்டதரணி சிராஸ் நூர்டீன் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டுகையில்,
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீதவான் குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவையின் பிரிவு 374 ன் படி செயற்பட வேண்டுமென்றும் அதன்படி சந்தேக நபரின் நீதிமுறையான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கட்டளையிடுமாரும், அதுவரையில் சந்தேக நபரை விளக்கமறியளில் வைக்குமாரும் ,ஏனென்றால் சந்தேக நபர் சமூகத்தில் நடமாடினால் ஏனையவர்களுக்கு மட்டுமல்லாது சந்தேக நபருக்கும் பாதிப்பாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் குற்றத்தடுப்பு பிரிவினர் ஏனைய வழக்குகளுக்கு ICCPR சட்டத்தை பாவிப்பது போன்று இந்த வழக்கில் ஏன் ICCPR சட்டத்தை பயன்படுத்தவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
இரு பக்க சமர்ப்பணத்தையும் செவிமடுத்த நீதவான் அவர்கள் அரசாங்க வைத்திய அதிகாரியிடமிருந்து சந்தேக நபரின் சித்த சுவாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் சான்றிதளை பெற்றுக் கொள்வதற்கான கட்டளையை பிறப்பித்ததுடன், சந்தேக நபரின் தற்போதைய சித்தசுவாதீனமற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதிக்கு இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் அளிக்கப்பட்ட 14 முறைப்பாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களின் முறைப்பாடுகளும் உள்ளடங்குகின்றன.
Post a Comment