Header Ads



இஸ்ரேலியர்கள் மீதான ஹமாஸ் தாக்குதலை கடுமையாக கண்டிக்கின்றோம், பணயக்கைதிகளை ஹமாஸ் உடன் விடுவிக்க வேண்டும் -


ஹமாசின் தாக்குதலின் போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.


காசாவில் அதிகரிக்கும் வன்முறைகள் தொடர்பில் கரிசனை வெளியிட்டுள்ள இலங்கை பணயக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


"ஹமாஸ் இஸ்ரேலில் பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கின்றோம் காசாவிற்கு பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்" என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பிரியங்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


உணவு எரிபொருள் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் காசாவிற்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படவேண்டும். இரு தரப்பும் உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் இலங்கை வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கை பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டிக்கின்றது தங்கள் அரசியல் மற்றும் ஏனைய நோக்கங்களை வன்முறைகள் மூலம் அடைவதற்கு முயல்பவர்கள் உட்பட அனைவரையும் இலங்கை கண்டிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் தீர்மானங்களின் அடிப்படையில் பாலஸ்தீன விவகாரங்களிற்கு முழுமையான பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வை காணவேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.