Header Ads



டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி


தாக்குதலுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த பின்னர், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்திய சாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.


பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. வைத்தியசாலையில் வைத்தே கிடைக்கும் விமானத்தில் சொந்த ஊரான ஐக்கிய இராச்சியத்துக்கு அனுப்பிவைத்தால் இலங்கையின் அரைவாசி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும். இது போன்ற சிறிய விடயங்களில் நாட்டின் சட்டத்தை அமல் நடாத்த இங்கு அரசாங்கம் இல்லாமலிருப்பது அனைவருக்கும் வெட்கக் கேடான ஒரு விடயமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.