ரணி ரணிலின் வெளிநாட்டு விஜயம் தொடர்பான தகவல்களை வெளியிட மறுப்பு
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஊடகவியலாளர் கே.திலிப் அமுதனினால் ஜனாதிபதி செயலகத்திடம் தகவலறியும் சட்டத்தின் ஊடாக கோரிய போதே ஜனாதிபதி செயலகம் இந்த மறுப்பு அறிக்கையை அனுப்பியுள்ளது.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்து, தற்போது நாடு வழமைக்கு திரும்பி வரும் சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமது பிரதிநிதிகள் குழுக்களுடன் பல்வேறு வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான், பிரான்ஸ், கியூபா, அமெரிக்கா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு, தனது பதவியேற்பின் பின்னரான காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட விஜயங்கள் அன்றி, அதிகாரபூர்வ விஜயங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட போதிலும், அந்த விஜயங்களில் அதிகளவிலான பிரதிநிதிகள் குழாம் பங்கேற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே, தகவலறியும் சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர் கே.திலிப் அமுதன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் ஒவ்வொரு நாட்டிற்குமான விஜயங்கள் தொடர்பிலான தகவல்களை, ஊடகவியலாளர் தனித்தனியாக கோரியுள்ளார்.
இவ்வாறு ஊடகவியலாளரின் கோரிக்கைக்கு, தனித்தனியாகவே ஜனாதிபதி செயலகம் மறுப்பு தகவலை அனுப்பி வைத்துள்ளது. bbc
Post a Comment