அக்ஸாவைத் தகர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் - இந்திய முஸ்லிம்களிடையே ஹமாஸ் தலைவரின் எழுச்சியுரை
27.10.23 வெள்ளி மாலை மலைப்புரத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் கருத்தரங்கில் ஹமாஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் காலித் மிஷ்அல் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கு கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துரைத்த அவர், “இஸ்ரேலை எதிர்த்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் உலகம் முழுவதும் குரல்கள் ஒலிக்க வேண்டும்” என்றார்.
விடுதலைக்காகப் போராடும் பாலஸ்தீன் மக்களுக்கு உங்களின் மானசீக, தார்மிக, பொருளாதார ஆதரவு வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
“1967முதல் மஸ்ஜிதுல் அக்ஸாவை இடிக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
“நெதன்யாகுவின் தலைமையில் தீவிர வலதுசாரிகள்கொண்ட ஆட்சி அமைந்தபிறகு அக்ஸாவைத் தகர்ப்பதற்குத் தக்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
“அக்ஸா பள்ளி நம் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்று. நபிகளாரின் விண்ணேற்றம்(மிஅராஜ்) தொடங்கிய இடம் அது.
“காஸாவில் உங்கள் அன்புச் சகோதரர்கள் கடந்த அக்டோபர் ஏழாம் நாள் முதல் அக்ஸாவுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதைத் ‘தூஃபானுல் அக்ஸா’ என்று அழைக்கிறார்கள்.
“இராணுவரீதியாகத் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் கள்ளங்கபடமற்ற குழந்தைகளைக் கொன்றுகுவித்து தன் பகையைத் தீர்த்துக்கொண்டிருக்கிறது.
“இதுவரை எட்டாயிரத்துக்கும் அதிகமானோர் வீரமரணம் அடைந்துள்ளனர்.(ஷஹீதுகள்)
“இவர்களில் பாதிக்கும் அதிகமானோர் பிஞ்சுக் குழந்தைகள்.
“எத்துணை இழப்புகள் ஏற்பட்டாலும் ஸியோனிஸத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்” என்று உணர்ச்சி மிகுந்த உரையாற்றினார்.
-சிராஜுல்ஹஸன்
Post a Comment