அரசுக்கு தாங்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ள விடயம்
எதிர்காலத்தில் அரச சேவையின் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவோர் அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு தாங்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
' நாட்டில் 15 .லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும். மக்கள் தொகையில் 12 பேருக்கு ஓர் அரசு ஊழியர் உள்ளார்.
இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். அரசுக்கு இது பாரிய சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை செய்ய முடியாது' என அவர் தெரிவித்தார்.
Post a Comment