இஸ்லாமிய நாடு எறும்பைக் கொன்றாலும் அது பயங்கரவாதம், இஸ்ரேலியப் பேய்கள் இரத்தம் குடித்தாலும் அது மானிட நேயம்
மனிதம் கருகும் பயங்கரவாதம்
———————————————-
- யாழ் அஸீம் -
மானிடத் தசைகள்
சிதறித் தெறிக்க
பாலகர் குருதியில்
பாலஸ்தீனம் நனைய
வெறியாட்டும் ஆடும்
சியோனிசப் பேயை
மானிட நேயத்தை
ஏறி மிதிக்கும்
இஸ்ரேலிய வெறியை
மனிதஉரிமையை
குழி தோண்டிப் புதைக்கும்
கொடூரத்தை
பச்சைப்பயங்கரவாதம்
அரங்கேறும் அராஜகத்தை
அடக்காமல் இதுவரை
கைகட்டிப் பார்த்திருந்த
அனைத்துலக சபைக்கும்
மேற்குலக நாடுகளுக்கும்
இழந்த மண்ணை
மீட்டத் துடிக்கும்
மண்ணின் மைந்தரின்
உரிமைப் போராட்டம்-அது
பயங்கரவாதமாம்!
மனித உரிமை மீறலாம்!
இஸ்லாமிய நாடு
எறும்பைக் கொன்றாலும்-அது
பயங்கரவாதம்
இஸ்ரேலியப் பேய்கள்
இரத்தம் குடித்தாலும் -அது
பயங்கரவாதமல்ல
அது மானிட நேயம்!
இல்லாத இரசாயன
ஆயுதத்துக்கு
ஈராக்கிய மண்ணில்
எண்ணெய் உறுஞ்சி
இரத்தம் குடித்த
அமெரிக்க அராஜகம்
இந்த சபைக்கு
பயங்கரவாதம் அல்ல..
அது மானிட நேயம்!
எப்பாவமறியா
அப்பாவி உயிர் மீது
இரசாயனம் வீசும்
இஸ்ரேலியக் கொடுமை
பயங்கரவாதமல்ல-ஆனாலும்
இழந்த மண்ணை
மீட்டத் துடிக்கும்
மண்ணின் மைந்தரின்
உரிமைப் போராட்டம்
பயங்கரவாதம்!
பாலின்றி மடியும்
பச்சிளம் பாலகர்..
உணவும் நீருமின்றி
மடிந்திடும் உயிர்கள்..
உணவின்றிச் சாவும்
உயிர்களின் கதறல்..
இஸ்ரேலிய நெருப்பில்
எரிகின்ற மானிடம்!
மனித உரிமைபற்றி
ஒப்பாரி வைக்கின்ற
மேற்குலக நாடுகளே!
சமாதானம் பேசுகின்ற
சாத்தானிய சபைகளே
இரத்தவெறிகொண்ட
ஈனச்செயல் கண்டும்-உங்கள்
ஊனக்கண்களுக்கு
எதுவும் புரியாத்து ஏன்?
இஸ்லாமிய இரத்தம்-உங்களுக்கு
இனிப்பாகும் போது
சிதறும் தசைகளும்
பீறிடும் குருதியும்-உங்கள்
விழிகளுக்கு விருந்தாகும் போது
எதுவுமே புரியாதுதான்..
இரத்தவெறி பிடித்த
இஸ்ரேலியக் காட்டேறியே!
சாத்தானியக் கயிற்றிலாடும்்
மேற்குலக நாடுகளே!
எக்காலமும் நிலைக்காது
உங்கள் பொம்மலாட்டம்!
எல்லோர் கயிறும்
இறைவன் கையில்..
ஆடும்வரை ஆடவிட்டு
ஓடும்வரை ஓடவிட்டு
அவன் பிடிப்பான
ஒரு நாளில்!
அனைத்துலகப் பயங்கரவாதியே!
உனையழிக்க இறைவனுக்கு
ஏற்பாடு தேவையில்லை
சிலந்திவலையில்
செம்மல் நபியைக் காத்தவன்..
சிறுகற்களால் ,வைக்கோலாய்
யானைப்படையைச் சிதைத்தவன்..
நொண்டிக் கொசுவால்
நம்றூதை அழித்தவன்
உனையழிக்க இறைவனுக்கு
ஏற்பாடு தேவையில்லை!
எங்கள் ஈமானிய இதயங்களும்
ஏந்துகின்ற கரங்களும்
இறைவனை எட்டும் வேளை
நீ அழிவாய் அந்நாளில்!
Post a Comment