Header Ads



தானிஸ் அலி வைத்தியசாலையில் அனுமதி


கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்குள் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட நிலையில் கைதான, போராட்ட செயற்பாட்டாளர் தானிஸ் அலி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


காவல்துறை பாதுகாப்பின் கீழ் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்குள் பிரவேசித்த அவர், அங்கிருந்த அதிகாரிகளுடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.


அதன்பின்னர், தொடருந்து நிலையத்தில் ஊழியர்கள் கடமையில் இருந்திருக்கவில்லை எனக்கூறி தமது கைப்பேசியில் காணொளி பதிவு செய்துள்ளார். 


இதனையடுத்து, தானிஸ் அலி தொடருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, கோட்டை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். 


காலிமுகத்திடல் போராட்டத்தின் போது, அத்துமீறி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அவர் உட்பிரவேசித்து, அங்கு ஒளிபரப்பான நேரலை நிகழ்ச்சிக்கும் தடையேற்படுத்தியிருந்தார். 


இதன்காரணமாக, அவர் டுபாய் செல்வதற்காக விமானத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.