அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு சர்வதேசமே பொறுப்புக்கூற வேண்டும்.
இது பற்றி கண்டன அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள முன்னாள் உறுப்பினர் ஷாம்நவாஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஸியோனிசவாதிகளின் கொடிய பிடிக்குள் காஸா மக்கள் அகப்பட்டு தவிக்கின்றனர்.இராணுவ இலக்குகளெனக் கூறிக் கொண்டு காஸா மக்களின் குடியிருப்புக்களையே இஸ்ரேல் தாக்கியழிக்கிறது. யுத்தத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாத அப்பாவிகள் குற்றுயிராகவும், குலைநடுக்கத்துடனும் காலத்தை கழிப்பது கவலையளிக்கிறது.
உணவு மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளையும் இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.
முழு காஸாவையும் முற்றுகைக்குள் திணிக்கும் இஸ்ரேலின் இந்தப்போக்கு யுத்த தர்மங்களை மீறியுள்ளது.
எனவே, இரு தரப்பிலும் அப்பாவிகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.ஐந்து தசாப்தங்களை கடந்துள்ள இப்பிரச்சினைக்கு தீர்வுகாண சகலரும் ஒத்துழைப்பது அவசியம்.அரசியல் ஆதாயங்களை இராணுவ அடக்குமுறையில் அடையத்துடிக்கும் இஸ்ரேலுக்கு உதவும் ஐரோப்பா,காஸாவில் உயிருக்காகப் போராடும் அப்பாவிகளு க்கு உதவவில்லை.
அயல்நாடுகளும் காஸாவை கைவிடுமோ என்றெண்ணுமளவுக்கு நிலைமைகள் உள்ளன. முஸ்லிம் உம்மத் என்ற உணர்வில் சகல இஸ்லாமிய நாடுகளும் காஸாவுக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் ஷாம்நவாஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment