இலங்கை ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பின், முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுக்கான தேசிய மாநாடு
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
இலங்கை ஆற்றலுள்ள பெண்கள் அமைப்பின் மூன்றாவது தேசிய முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுக்கான மாநாடு நேற்று காத்தான்குடியில் அமைப்பின் தலைவர் இலக்கிய வித்தகர் மசூரா சுகுர்தீன் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது.
காத்தான்குடி தாருல் அர்க்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மாநாட்டுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா மற்றும் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை தலைவர் பேராசிரியர் எம் எஸ் எம் அனஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த மாநாட்டில் இமயம் தழுவும் இறக்கைகள் எனும் இருபது பெண் கவிஞர்களினால் மொழிபெயர்த்து எழுதப்பட்ட கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. மசூரா சுகுர்தீன் தலைமையில் நாடளாவிய ரீதியில் பெண் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கு மற்றும் விருது வழங்கல் சான்றிதழ் வளங்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் இது அமர்வுகளாக இடம்பெற்றன.
குடும்பம் எங்கள் விழி ஆற்றல் எங்கள் வழி என்னும் தொனிப்பொருளில் இடம் பெற்ற இம் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுக்கான தேசிய மாநாடு மூன்றாவது முறையாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாநாட்டில் நாடளாவிய ரீதியிலpருந்து பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் இலக்கியத் துறை சார்ந்தோர் கலந்து கொண்டனர் கல்விமான்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் என பலரும் அதிதிகளாகவும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment