நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க, புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது – கல்வியமைச்சர்
நமது நாட்டில் உள்ள அறிவார்ந்த நபர்கள் தங்கி தங்களுடைய நிபுணத்துவத்தை வழங்குவது மிகவும் முக்கியம். நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, அவர்கள் தமது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி எமது தேசம் தற்போது எதிர்நோக்கும் சவால்களில் இருந்து வழிகாட்டி மேம்படுத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அமைச்சில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் மற்றும் அதிபர் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலவசக் கல்வியின் பலனாகப் பிறந்த புத்திஜீவிகள், நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தற்போதைய சவாலாக உள்ள மூளைச் சலவையைத் தவிர்ப்பதற்கான பொறுப்பை நினைவு கூர்ந்த அமைச்சர், “அறிவுமிக்க மக்களின் பொறுப்பு, நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான். இந்த நாட்டில் தங்கி சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறன்களை வெளிப்படுத்த வேண்டும்.” எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் திருடக்கூடாது
ReplyDelete