Header Ads



கல்பிட்டியில் வர்த்தகப் பெண் கடத்தல்


கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று -23- அதிகாலை காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கல்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தக பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.


காரில் வந்த குழு ஒன்றினாலேயே இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று அதிகாலை பெண் கடத்தப்பட்ட காரை ஆனமடுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


குறித்த கார் பாலாவிய - முந்தலம் ஊடாக ஆனமடுவை நோக்கி பயணிப்பதாக கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அதனைக் தடுக்குமாறு கல்பிட்டி பொலிஸார் சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.


குறித்த காரை ஆனமடுவ பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது, ​​காரில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டிய சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.


இதேவேளை, ஆனமடுவ, வதத்த பிரதேசத்தில் குறித்த காரின் வேகம் குறைந்த போது  கடத்தப்பட்ட வர்த்தகப் பெண் காரில் இருந்து குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


காரில் இருந்து தப்பிய குறித்த பெண் மறைந்திருந்த நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடித்து ஆனமடுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


குறித்த பெண் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், கைது செய்யப்பட்ட நபரையும், பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்ணையும் மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.