பள்ளிவாயலும், இராணுவமும் இணைவு
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தலைமயகம் ஸ்தாபிக்கப்பட்டு 20 வருட நிறைவையொட்டி காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்றது. பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம். பரீட் இந்நிகழ்வு நடைபெற்றது.
கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யூ.பி. குணரத்ன மற்றும் ஏனைய இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மஹல்லாவாசிகள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சமூகத்தில் நடைபெறும் தவறுகளை பிழைகளை குற்றங்களை கட்டுப்படுத்தும் முகமாக பள்ளிவாயலும் இராணுவமும் இணைந்து எதிர்காலத்தில் பல்வேறுபட்ட செயற்பாடுகள் ஈடுபட வேண்டும் என்ற நன்னோக்கில் இந்நிகழ்வு பள்ளிவாயலில் இடம் பெற்றது.
நிகழ்வின்போது, அங்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களுக்கு, எமது பள்ளிவாயல் நிருவாகத்தினால் புனித அல்-குர்ஆன் சிங்கள மொழியாக்கப் பிரதி வைபவத்தின் நினைவாக வழங்கி வைக்கப்பட்டது.
இறுதியாக ஆயுட்கால இமாம் மௌலவி முஸ்தபா பலாஹி, பிரதம பேஷ் இமாம் அஷ் ஷேய்க் அல் ஹாபிழ் எம்.எம்.எம். இல்ஹாம் பலாஹி மற்றும் பேஷ் இமாம் அல் ஹாபிழ் எச். ஹாலித் அஹ்மத் பலாஹி ஆகிய மூவரும் இராணுவ உயர் அதிகாரிகளினால் அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நாட்டில் அமைதி சமாதானத்திற்காக விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
Post a Comment