Header Ads



ஏலவே வென்றுவிட்ட ஹமாஸ் - இறை விசுவாசத்தின் நிழலை மாத்திரம் நம்பி போராடும் மக்கள்


காஸா, 365 சதுர கிலோ மீற்றர்கள் மாத்திரம் அடங்கிய சிறியதொரு நிலப்பரப்பு. இதன் அளவை நம்நாட்டின் #அம்பாரை மாவட்டத்தோடு ஒப்பிட்டால், அம்பாரை மாவட்டத்தின் பரப்பு 4415 சதுர கிலோ மீற்றர்கள். அதாவது 12 ல் ஒரு பகுதிதான் காஸா. 


இந்த குறுகிய நிலப்பரப்பில் 20 இலட்சத்திற்கு அதிகமானவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அம்பாரை மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 752,000 எனும்போது இதனைவிட மூன்று மடங்கு அதிகம் கொண்ட ஒரு சனத்தொகையை 12ல் ஒரு பகுதிக்குள் வாழ்வதென்றால் எவ்வளவு #நெரிசலாக இருக்கும். இதுதான் காஸா.


காஸாவின் எல்லாத் திசைகளும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள்ளே இருக்கின்றன. நீர், மின்சாரம், எரிபொருட்கள், மருந்துகள் அனைத்தும் இஸ்ரேலியர்கள் அளந்து கொடுப்பதனை மட்டுமே காஸா #மக்களால் நுகர முடியும். 


அத்தோடு காஸா நிலப்பரப்பு மக்கள் அதிகம் நிறைந்த பிரதேசம் என்பதனால் இஸ்ரேலிற்கு எதிரான எத்தகைய வேலைத்திட்டமும் உடனடியாக உளவுத்தகவல்களாக மொஸாட்டை சென்றடைந்துவிடும். இதில் உளவாளிகளைக் கண்டுகொள்வது சிரமசாத்தியமான ஒன்று. 


காஸா #பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. அங்கு வேலையில்லா அளவு 56 வீதம். விவசாயமும் மீன்பிடியும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக சொல்லப்போனால் ஏனைய நாடுகள், பொது அமைப்புக்கள், ஐ.நா வின் சில உதவிகளோடு தப்பி பிழைத்துக்கொண்டிருக்கும் ஒரு பிரதேசம். 


இந்த பின்னணியோடு,  இஸ்ரேல் என்பது ஆக்கிரமிக்கப்பட்ட விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசம். சிறந்த #விஞ்ஞான வளர்ச்சி, கல்வி, விளையாட்டு என அனைத்தும் நிறைவாக கிடைக்கின்றது. 


இஸ்ரேல் செல்வந்த நாடுகளின் செல்லப் பிள்ளை. தொழிநுட்பங்களின் முன்னோடி. அதி நவீன ஆயுதங்களையும் சிறந்த கட்டமைப்பையும் கொண்ட இராணுவம். உலகில் அதிசிறந்த ரொக்கட் எதிர்ப்பு தொழிநுட்பம், உலகில் எங்கும் ஊடுருவி தமது இலக்குகளை தாக்கும் தன்மை கொண்ட உளவுப் பிரிவு. தமது நாட்டு எல்லைகளைச் சுற்றி கொங்கிரீட் வேலிகள், சென்சர்கள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு சுவர்கள் என்று ஒரு #அபிவிருத்தியடைந்த நாட்டிற்கான இலக்கணங்களைக் கொண்டது.


இத்தனையையும் தாண்டி ஒரு சிறிய குழு ஹமாஸ் இஸ்ரேலைத் தெறிக்கவிட்டுள்ளது என்றால் யார் உண்மையில் பலசாலி. 


இஸ்ரேல் என்ற வளர்ச்சி பெற்ற நாட்டினது இராணுவம், #தொழிநுட்பத்திற்கு சரிசமமாக நின்று போராடுகிறார்கள். 


சின்னஞ்சிறு நிலப்பரப்பிற்குள் ஆயிரணக்கணக்கான ரொக்கட்களைத் தயாரிக்கவேண்டும், அவற்றைப் பத்திரப்படுத்த வேண்டும், எதிரிக்கு தகவல்கள் கசியாமல் பாதுகாக்க வேண்டும், அவற்றை யாருக்கும் தெரியாமல் தாக்குதலுக்கா கொண்டுசெல்ல வேண்டும். எத்தகைய பெரிய பொறுப்பு வாய்ந்த வேலைத்திட்டம். எவ்வளவு அவதானமும் திட்டமிடலையும் வேண்டி நிற்கும் செயற்பாடு. அதனைக் கட்சிதமாக செய்து முடித்து வெற்றிபெற்றது ஹமாஸ். 


இத்தனை ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை எகிப்து, இஸ்ரேலின் கண்களுக்குப் புலப்படாமல் ஹமாஸ் படையணி சாமர்த்தியமாக ஒன்று சேர்த்துள்ள செய்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. இங்கு வென்றது மொஸாட் அல்ல ஹமாஸின் ஆயுதப் பிரிவு இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம். 


ஹமாஸின் #தொழிநுட்ப பிரிவு மிகவும் திறமை வாய்ந்தது. சொல்லப்போனால் இஸ்ரேல் நாட்டிலுள்ள இராணுவ தொழிநுட்ப பிரிவை விஞ்சியது எனலாம். இஸ்ரேல் தனது தொழிநுட்பத் துறை வழர்ச்சிக்காக உலகில் தலைசிறந்த தேர்ச்சியாளர்களை வேலைக்கமர்த்தி செயற்பட்டுவருகின்றது. ஆனால் இத்தகைய எந்த வசதிவாய்ப்புக்களும் இல்லாத ஹமாஸினர் இங்கு இஸ்ரேலின் கணணி, மற்றும் செயற்கை நுண்ணறிவு அனைத்தையும் மிகைக்குமளவிலான திறமை கொண்டு செயற்பட்டிருக்கிறார்கள் எனும் போது இஸ்ரேலால் தன் முகத்தில் தானே காறி உமிழ்வதனைத் தவிர வேறு வழியில்லை. 


ஹமாஸின் திட்டமிடலும் அதனை நடைமுறைப்படுத்தும் ஒழுங்கமைப்பும் அலாதியானது. திட்டமிட்டபடி “துாபானுல் அக்ஸா“ அக்ஸா பிரளைய நடவடிக்கையின்போது இஸ்ரேலின் முக்கிய இராணுவ அதிகாரிகளை அவர்களின் இடங்களுக்கு சென்று தட்டித் துாக்கியது, ஹீரோவாக தன்னைத் தகவமைப்பு செய்த இஸ்ரேலை உலக அரங்கில் தலை குனிய வைத்துள்ளார்கள் ஹமாஸ் படையினர். 


இஸ்ரேலிற்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களுக்கு குரல் கொடுக்க உலகமே ஓடிவரும்போது, பலஸ்தீன மக்கள் விடையத்தில் அடக்கி வாசிப்பதே சிறந்தது என்று ஓரமாகிவிடுகிறது அரபு முஸ்லிம் நாடுகள். ஓரிரெண்டைத்தவிர. இவை எதனையும் பொருட்படுத்தாமல் இறை விசுவாசத்தின் நிழலை மாத்திரம் நம்பி போராடும் மக்கள் ஏலவே வென்றுவிட்டார்கள்.

🌠சுபைதீன் றிஸான்

No comments

Powered by Blogger.