இன்றைய ஊடக சந்திப்பில், முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட முக்கிய கருத்துக்கள்
*அரசாங்கம் நேற்று சமர்ப்பித்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் தொடர்பாக நாம் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளோம்.
*ஜேர்மன் விஜயத்தின் போது ஜனாதிபதி சர்வதேச விசாரணை தேவையில்லை என்றார்.
*ஹரின் மற்றும் மனுஷ ஆகிய இருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவை தெரிவிக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நியாயம் கிடைக்க வேண்டும்.
*2022 ஆம் ஆண்டு சர்வதேச விசாரணை தேவை என்ற ரணில் விக்ரமசிங்க 2023 இல் சர்வதேச விசாரணை தேவையில்லை என்கிறார்.
ஒரு வருடம் கடந்து சர்வதேச விசாரணை தேவை இல்லை என்கிறார்.
*2019-2015 நல்லாட்சி காலத்தில் மங்கள சமரவீர ஊடாக நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் இறுதி யுத்த விசாரணைக்கு Hybrid நீதிமன்றம் ஊடாக சர்வதேச ஆதரவுடன் விசாரணை தேவை என்று முன்மொழிந்தார்.
*அதிகாரம் கிடைத்தவுடன் தற்காலிக ஜனாதிபதியாக இருந்து கொண்டு சர்வதேச விசாரணைக்கு தயார் இல்லை என்கிறார்.
*யாரை பாதுக்க ஜனாதிபதி முயல்கிறார்.
*மொட்டிவின் ஜனாதிபதியாக இருந்து சர்வதேச விசாரணை வேண்டாம் என்கிறார்.
*2019 சர்வதேச பொலிஸாரின் உதவிகள் கிடைத்த போது அன்று எதிர்திருக்க வேண்டுமல்லவா?இன்று என்ன கூறுகிறார்.
*சமூக ஊடக சட்ட மூலம்,
நிகழ் நிலை காப்பு சட்ட மூலம்
தேர்தல் ஒத்திவைப்பு,
நீதிமன்ற தலையீடு என்பன மக்கள் கருத்தை அடக்க எடுக்கும் முயற்சியாகும்.
ஜனநாயகவாதி என்ற இதுவரை காண்பித்து வந்த தோற்றத்து மாற்றமான எண்ணப்பாடுகளை முன்வைத்து வருகிறார்.
*ஜனாதுபதி பதவிக்காகவும்,
அதிகாரத்துக்காகவும் ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தை தாரை வார்தரதுள்ளார்.
*ஜேர்மன் ஊடக நேர்காணலில் What is the Easter? என்று கேட்காமல் விட்டது போதும்.
*கோத்திர அரசியல் சிந்தனையிலே ரணில் விக்ரமசிங்க அவர்களும் இன்றும் உள்ளார்.விக்ரமசிங்க அவர்களும் இதே கொள்கையிலே இருக்கிறார்.
பாராளுமன்றத்தை மதிப்பதாக இல்லை.ஜ தே க தலைவராக இருந்த போதும் அவர் சர்வாதிகாரியாகவே செயற்பட்டார்.தமது பதவிக்காகவும் அதிகார பேராசைக்கும் இன்று மக்களின் ஜனநாயகத்தோடு விளையாடி வருகிறார்.
*மொட்டுக் கட்சியினரே உங்களது ஜனாதிபதி வேட்பாளர் நான் தான்,வேறு யாரையும் தேடாதீர்,நீங்கள் சொல்வதை கேட்பேன்,
உங்களுக்கு ஏற்றால் போல் செயற்படுவேன் என்ற செய்தியையே ஜேர்மனியிலிருந்து ஊடக நேர்காணல் மூலம் ஜனாதிபதி ரணில் மொட்டு கட்சியினருக்கு கூறியுள்ளார்.
*ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க புலனாய்வு பிரதானியுடன் அமெரிக்க விஜயங்களை மேற்கொள்கிறார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நீதியான விசாரணையை எவ்வாறு எதிர்பார்பது?
*பிள்ளையான் இன்றும் இராஜாங்கவே அமைச்சராகவே இருக்கிறார்.
ஜனாபதி முதல் 1st Class பிரஜையாகவே இருக்கிறார்.அதனால் தான் பொருளாதார ரீதியாக மக்கள் சார்ந்து எந்த மனிதநேயமும் அற்று தீர்மானம் எடுக்கிறார்.
*நிகழ் நிலை காப்பு சட்ட மூலத்தை ஏன் ஊடகத்துறை அமைச்சால் சமர்ப்பிக்க முடியாது?
*பாதுகாப்பு அமைச்சால் ஏன் சமர்ப்பிக்க வேண்டும்?
*அரசாங்கம் இதை கொண்டு வந்த வழிமுறையில் அரசாங்கத்தின் நோக்கம் நன்கு புலப்படுகிறது.
எதிர்க்கட்சியின் கருத்தைக் கூட கேட்கவில்லை.ஊடகம் துறை சார் நிறுவனங்கள்,அமைப்புகளின் கருத்தைக்களைக் கூட கேட்கவில்லை.
*ஊடகத்துறை அமைச்சு சார் ஆலோசனை குழுவிலும் இது குறித்து கலந்துரையாடப்படவில்லை.
அவசர அவசரமாக இதை கொண்டுவருவது மக்களின் கருத்து வெளிப்பாட்டினூடாக சமூகத்தில் எழும் பொதுக்கருத்துவாக்கத்தை முறியடிக்கவே இதை மேற்கொள்கிறார்.
Post a Comment