பல கோடி பொறுமதியான சரக்குகளுடன் கிடப்பில் போடப்பட்டுள்ள 91 கொள்கலன்கள்
இலங்கை சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட 435 வாகனங்களில் 133 வாகனங்களை உரிய ஆவணங்கள் காணாமல் போனதால் 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு இணங்க விடுவிக்க முடியாது என்று அறியமுடிகிறது.
இந்த வாகனங்கள் மற்றும் கொள்கலன்கள் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் சுமார் 8 கோடி ரூபாயை வாடகையாக செலுத்தி, உரிய வரிகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் அல்லது ஏலம் விடுவதற்கு அனுமதி கிடைக்கும் வரை வைக்கப்பட்டிருந்தன.
2023 ஜனவரி 31ஆம் திகதி முதல் தற்போது வரை 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 435 வாகனங்கள் மற்றும் பல்வேறு சரக்குகளுடன் 91 கொள்கலன்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இதில் 261 வாகனங்கள் மற்றும் 86 கொள்கலன்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment