Header Ads



8 வார கால அவகாசம் வழங்கியுள்ள உயர் நீதிமன்றம்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, காலிமுகத்திடல் போராட்டத்தின் போது  நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியாக இருந்த போது எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.


இதன்படி, ஆட்சேபனைகள் இருப்பின் இன்று முதல் எட்டு வார காலத்திற்குள் அவற்றை தாக்கல் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.


இன்று காலை  இது தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.