நாட்டில் மார்பக புற்றுநோயால், வருடாந்தம் 700 - 800 பேர் உயிரிழப்பு
இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700-800 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகரும் சமூக வைத்தியருமான வைத்தியர் சுராஜ் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 14 நோயாளர்கள் பதிவாகுவதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
ஆரம்பகால நோயறிதல் நோயைக் குணப்படுத்த வழிவகுக்கும் எனவும், நோய்வாய்ப்பட்ட சுமார் 10,000 பெண்களுக்கு முழுமையாக சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
20 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாந்த மார்பகப் புற்றுநோய் பரிசோதனை அவசியம் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment