Header Ads



6 மாதத்தில் குர்ஆனை மனனம் செய்த, அல் ஜாமியத்துல் அஸீஸியா அரபுக்கல்லூரி மாணவி ஹஸ்மத் பாணு




புத்தளம். மதுரங்குளி விருதோடையில் அமைந்திருக்கும் அல் ஜாமியத்துல் அஸீஸியா அரபுக்கல்லூரியின் ஆன்மீகத் தலைவரும், பன்னூல் ஆசிரியருமான அல்ஹாபிழ் அப்ழலுல் உலமா அஷ்ஷெய்யத் அப்துல் அஸீஸ் மொளலானா அவர்களின் தலைமையில் இந்த அரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.


காசிம் நகர் குச்சவெளி 3ஐ முகவரியாகக் கொண்ட அப்துல் கரீம் ஹக்குல் முபீன் மற்றும் ஹம்சா நஜ்மியா ஆகியோரின் செல்வப் புதல்வியான அல் ஹாபிழா ஹஸ்மத் பாணு அவர்கள் அல் ஹாபிழ் அல் ஆலிம் முஹம்மது ஆரிய (அல் அஸீஸீ) மற்றும் அல் 'ஹாபிழா அல் ஆலிமா தஸ்லிமா பர்வீன் (அல் அஸீஸியா ஆகிய இருவர்களின் சிறப்பான நேரடி வழிகாட்டுதலின் கீழ் சுமார் 6 மாத காலத்தில் புனித அல் குர்ஆனை முறையாக மனனம் செய்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார், 


அல்ஹம்துலில்லாஹ் 


இச்சாதனையை கல்லூரி நிர்வாகம் வல்ல அல்லாஹ்வைப் புகழ்ந்து அம் மாணவியைப் பெருமனதோடு பாராட்டுவதோடு இச்சாதனையைக் கெளரவிக்கு முகமாக அம்மாணவி இலவசமாக புனித உம்ரா செல்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இக்கல்லூரியில் ஆண் பெண் இருபாலாருக்குமான கிதாபு. ஹிப்ழ் வகுப்புக்கள், அரசாங்கப் பாடத்திட்டத்திற்கமைய ஆங்கில மொழியிலான சர்வதேச பாடசாலை வகுப்புக்கள். அஹதிய்யா வகுப்புக்கள். ஆங்கில மொழியிலான பாலர் பாடசாலை வகுப்புக்கள் O/L, A/L மற்றும் வெளிவாரி கலைப்பட்டதாரிகளுக்கான வகுப்புக்கள். தொழில்பயிற்சி வகுப்புக்கள் போன்றனவும் நடைபெறுகின்றன.


இப்படிக்கு


நிர்வாகம்


அல் ஜாமியத்துல் அஸீஸியா அரபுக்கல்லூரி

No comments

Powered by Blogger.