கொழும்பில் 5 பேரின் உயிரைக் குடித்த மரம் பற்றிய தகவல்
கொழும்பில் இன்று -06- பயணிகள் பேருந்து மீது முறிந்து வீழ்ந்து விபத்தை ஏற்படுத்திய மரம் 40வருடங்கள் பழமையானது என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
40 வருடங்கள் பழமை வாய்ந்த ரொபரோஸியா வகையான மரம் ஒன்றே பேருந்தில் முறிந்து வீழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மரத்தை அகற்ற வேண்டும் என எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
குறித்த மரங்களின் தன்மை தொடர்பில், ஆராய்ந்து அதனை அகற்றுவது தொடர்பில், எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு அதன் புறங்களில் இவ்வாறு முன்பு நடப்பட்டு பெரியதாக வளர்நதுள்ள இத்தகைய மரங்களின் தன்மை, அவற்றால் பொதுக்களுக்கு ஏற்படும் ஆபத்து, அவற்றை தொடர்நதும் வைத்திருப்பதா அல்லது அவற்றை வெட்டி அகற்றிவிடுவதா என்பது பற்றி தீர்மானித்து இத்தகைய இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மாநகர ஆணையாளர்களின் பணிகளில் பிரதானமானது. அவை பற்றி எந்த முறைப்பாடுகளும் வரவில்லை என தானும் அவருடைய பதவியையும் முதலில் காப்பாற்றிக் கொண்டார். இதுதான் இலங்கை அரச அதிகாரிகளின் நடத்தை. பொதுமக்களுக்கு என்ன நடந்தாலும் பிரச்சினையில்லை. தான் தப்பிக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். இனியாவது உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் ஆணையாளர்களின் கடமைகளில் முதன்மையானதாக மரங்களால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிசெய்வதை இந்த ஆணையாளர்களின் அடிப்படைக் கடமையாக சுற்று நிருபம் வௌியிட்டு அதனை உடனடி அமுல்படுத்த வேண்டும்.
ReplyDelete