Header Ads



நுவரெலியாவில் பூமிக்கு கீழ், அசாதாரண சத்தம் - 50 குடும்பங்கள் வெளியேற்றம்


நுவரெலியாவில் உள்ள கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் பூமிக்கு கீழ் அசாதாரண சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதனால் சுமார் 50 குடும்பங்கள் இரவுவேளைகளில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.


இக் கிராமத்தில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான கிராம மக்கள் இரவில் பூமிக்குள் இருந்து பல்வேறு ஒலிகளை கேட்பதாக அறிவித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எப்படியிருப்பினும் நுவரெலியா கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளை நியமித்து நாளை முழு விசாரணை நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


இந்த நிலைமை குறித்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் நாளைய தினம் (15-10-2023) மேற்கொள்ளப்படும் ஆய்வுக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   

No comments

Powered by Blogger.