இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில இதுவரை 4,385 பேர் உயிரிழப்பு - பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் குழந்தைகள்
காசாவின் சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின் அடிப்படையில் இத்தகவல்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன
இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 4,385 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 1,756 குழந்தைகள் மற்றும் 967 பெண்கள் உள்ளனர்.
மேலும் 13,561 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள்.
ஏராளமான மக்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் உள்ளனர்.
Post a Comment