மனிதாபிமான நோக்குடன் 3 பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ் - திருட்டு மௌனம் காக்கும் இஸ்ரேலும், மேற்கு ஊடகங்களும்
ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணியால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளில் பெண் ஒருவரையும், இரண்டு குழந்தைகளையும் விடுவிக்கும் காணொளி ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட பெண் ஒரு இஸ்ரேலியர் என கஸ்ஸாம் படையணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - காசா எல்லை வேலிக்கு அருகில் உள்ள ஒரு திறந்த வெளியில் இந்த மூவரையும் ஆயுதம் தரித்த இரு போராளிகள் விட்டுவிட்டுச் செல்வதை காணொளி காட்டுகிறது.
எனினும் இது தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இஸ்ரேலிய ஊடகங்கள் இந்த விடுவிப்பு முன்பே நடந்ததாகக் கூறுகின்றன.
Post a Comment