கேரளாவில் ஜெபக் கூட்டத்தின்போது குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 36 பேர் படுகாயம்
கேரள மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவான யெகோவா ஜெபக் கூட்டத்தின்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கொச்சியில் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று(அக்டோபர் 29) காலையில் இந்த மாநாட்டின் பிரார்த்தனைக் கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, மாநாட்டிற்குள் சில முறை வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்பு மொத்தம் மூன்று இடங்களில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை பிரார்த்தனை முடிந்த உடனேயே மண்டபத்தில் முதல் வெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு முறை என மூன்று முறை குண்டுவெடிப்பு நடந்ததாகவும் ஜெபக் கூடத்தின் உள்ளூர் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகுமார் கூறினார்.
Post a Comment