Header Ads



32 வருடங்களுக்கு பின்னர், மூவருக்கு மரண தண்டனை


கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.


சம்பவம் தொடர்பில் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மற்றுமொரு நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


1992 ஆம் ஆண்டு நவுந்துடவ பிரதேசத்தில் உள்ள மீகமவத்தை பிரதேசத்தில் வசித்த நபரை தாக்கி கொலை செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.


இதன்படி 3, 4 மற்றும் 5ம் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.


கொலைச் சம்பவத்தின் முதலாவது பிரதிவாதிக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.