Header Ads



கொழும்பை அச்சுறுத்தும் 300 மரங்கள்


கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 300இற்கும் மேற்பட்ட மரங்கள் மக்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளன.


இவற்றை உடனடியாக அகற்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.


அபாயகரமான மரங்கள் முறிந்து விழுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம்பெற்றபோதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


புறநகர் பகுதிகளில் மிகவும் பொருத்தமான மற்றும் தரமான மரங்களை நடுவதை உறுதி செய்வதற்கான முறையான அமைப்பைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.