வாய்மொழி பாலியல் துன்புறுத்தல் - வர்த்தகருக்கு பாடம் புகட்டிய 2 பொலிஸ்காரிகள்
- ஷேன் செனவிரத்ன -
அலவத்துகொட பொலிஸ் பிரிவு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய வர்த்தகர் ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கோழி இறைச்சி மற்றும் ஐஸ்கிரீம் விற்கும் கடைக்குச் சென்ற இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு லீற்றர் ஐஸ்கிரீம் வாங்கச் சென்றுள்ளனர். அதற்குத் தேவையான பணம் தங்களிடம் இருக்கவில்லை. போதாமல் இருக்கும் பணத்தை முதலாளி போட்டுக்கொள்வாரா என அவ்விருவரும் கேட்டுள்ளன.
அப்போது, சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர், இரண்டு பொலிஸ் அதிகாரிகளிடம் மறைமுகமான மொழியில் வாய்மொழியாக பாலியல் ரீதியாக பேசியுள்ளார்.
மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலிஸ் நிலையத்துக்குக் திரும்பி, சம்பவம் தொடர்பான குறிப்பை எழுதிவைத்துவிட்டு, அந்த வர்த்தகரைக் கைது செய்தனர்.
அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சுஜீவ குணதிலக்கவின் பணிப்புரையின் பிரகாரம் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment