பிரான்ஸில் இலங்கை மாணவிக்கு ஆதரவாக 23,000 கையொப்பங்கள் சேகரிப்பு
உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரான்சில் தஞ்சமடைந்த ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ என்ற இலங்கை மாணவியை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மாணவி ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ (Onel-Shenaya) கூறுகையில், இலங்கையில் தாம் எதிர்கொண்ட அச்சுறுத்தலை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்ஸ்சிற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமான கல்வித் திட்டத்திற்கு மாறுவதற்கு முன்பாக பிரென்ஞ் மொழி பேசாத மாணவர்களின் வகுப்பில் இணைந்து மொழி கற்கைகளை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
தான் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் போர்டேக்ஸ் நகரில் வசித்ததுடன், கல்வியிலும் சிறப்பாக செயற்பட்ட ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோவிற்கு (Onel-Shenaya) கல்வியை தொடரும் வகையில் நிரந்தர குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை பேணாமை மற்றும் ஒருங்கிணையாமை போன்ற காரணங்களை முன்வைத்து மாகாணத்தை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ்- ஜிரோண்டே நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனினும் ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோவிற்கு (Onel-Shenaya) தமது ஆதரவை வெளியிட்டுள்ள ஆசிரிய ஊழியர்கள், அவர் வெளியேற்றப்படுவதற்கான காரணம் குறித்து தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ, விடாமுயற்சியுள்ள மாணவி எனவும் ஒரு சில ஆண்டுகளிலேயே மிகவும் ஈர்க்க கூடிய வகையில் பிரென்ஞ் மொழியை பயின்று, திறமையை வெளிப்படுத்தியதாகவும் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் மாணவி ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ (Onel-Shenaya), பிரான்ஸ்சிலேயே தங்குவதற்கான உரிமையை நிலைநாட்டும் வகையில் இணை வழியான மனுவின் ஊடான ஆதரவு கோரப்பட்டுள்ளது.
அந்த மனுவில் 23 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் கையெழுத்துக்களை பெற்றுள்ள நிலையில், சட்டத்தரணியின் உதவியுடன் தம்மை வெளியேற்றும் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதையும் ஜிரோண்டே மாகாண நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேசமயம் , ஜிரோண்டே நிர்வாகம் ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோவின் நிலைமையை மீளாய்வு செய்யவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment