புத்தகங்களின் மேலட்டையில் 230 மில்லியன் ரூபா பெறுமதியான ஆபத்தான் பொருள்
- Ismathul Rahuman -
230 மில்லியன் ரூபா பெறுமதியான 4598 கிராம் கொக்கேன் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க ஊடக பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவிக்கையில் 22 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு QR 656 இலக்க விமானத்தில் வந்திறங்கிய 42 வயதான இந்தோனேசியா பெண்ணில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவரின் பயணப் பொதியை பரிசோதித்த போது அதிலிருந்த சிறுகதை புத்தகங்களின் மேலட்டையில் சூசகமான முறையில் மறைத்து வைத்திருந்த கொக்கேன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதில் 4598 கிராம் கொக்கேன் போதைப் பொருள் இருந்துள்ளது. அதன் தற்போதைய சந்தைப் பெறுமானம் 230 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணையும் போதைப் பொருளையும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்ததாக ஊடக பேச்சாளர் மேலும் கூறினார்.
Post a Comment